சினேகா வீட்டில் வரலட்சுமி பூஜை
ADDED : 1549 days ago
கடந்த வெள்ளியன்று வரலட்சுமி பூஜையை அடுத்து தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில் அம்மனை சிறப்பாக பூஜை செய்து வழிபட்டனர். வரலட்சுமி பூஜை செய்பவர்க்ளுக்கு மாங்கல்ய பாக்கியம் மற்றும் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் நடிகை சினேகா, நடிகர் அருண் விஜய் குடும்பத்தினருடன் வரலட்சுமி பூஜை செய்துள்ளார். அருண் விஜய்யின் மனைவி மற்றும் அவரது சகோதரி நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தனுஷின் சகோதரி உள்ளிட்ட பல கோலிவுட் நட்சத்திரங்களுடன் வரலட்சுமி பூஜை செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.