சலார் - மிரட்டும் ஜெகபதிபாபு
                                ADDED :  1529 days ago     
                            
                             கன்னடத்தில் வெளியான கேஜிஎப் என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துவிட்டார். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஜெகதிபாபு வில்லனாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தில் ஜெகபதிபாபு நடிக்கும் ராஜமன்னார் என்ற வில்லன் வேடத்தின் மிரட்டலான அதிரடி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.