உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிவி சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய சிரஞ்சீவி

பிவி சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய சிரஞ்சீவி

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து. அந்த வகையில் இரு ஒலிம்பிக் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவருக்கு பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒருபடி மேலே போய் பிவி சிந்துவுக்கு விருந்துடன் கூடிய ஒரு தடபுடலான பாராட்டு விழாவை நடத்தி விட்டார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரஞ்சீவி தனது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பலரையும் அழைத்திருந்தார். குறிப்பாக நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பிவி சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு சிந்துவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !