இயக்குனருக்கு கொரோனா தொற்று
ADDED : 1508 days ago
கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் சமீபகாலமாக சில திரைப்பிரபலங்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஷெரின், நதியாவை தொடர்ந்து இயக்குனர் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ‛கெத்து, மான்கராத்தே' படங்களை இயக்கிய திருக்குமரன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது மனைவிக்கும் தொற்று இருப்பதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.