செப்., 3-ல் கோபிசந்த் - தமன்னாவின் சீட்டிமார் ரிலீஸ்
ADDED : 1516 days ago
சம்பத் நந்தி இயக்கத்தில் கோபிசந்த், தமன்னா நடித்துள்ள படம் சீட்டிமார். இதில் ஆந்திராவிற்கான பெண் கபடி அணியின் பயிற்சியாளராக கோபிசந்தும், தெலுங்கானா அணியின் பயிற்சியாளராக தமன்னாவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு கபடி விளையாட்டு மாஸ்டரிடம் முறையான பயிற்சி எடுத்து அதன்பிறகே நடிக்கத் தொடங்கினார் தமன்னா.
இப்படத்தின் டீசர் மற்றும் ஜ்வாலா ரெட்டி என்ற பாடலும் வெளியிடப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாவது அலைக்குபிறகு தியேட்டரில் தான் படத்தை வெளியிட வேண்டும் என்று காத்திருந்தவர்கள் இப்போது செப்டம்பர் 3-ந்தேதி சீட்டிமார் படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் தெலுங்கில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு வெளியாகும் முதல் மாஸ் படம் இதுவாகும்.