பிக்பாஸ் 5 புரோமோ ஷூட் - வைரலாகும் கமலின் புகைப்படங்கள்
ADDED : 1526 days ago
பிக் பாஸ் 5 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கமலின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிக்பாஸ் ஐந்தாம் சீசனுக்காக வழக்கம் போல இவிபி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு, அதன் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தில் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் 5 பற்றிய அப்டேட் இந்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் பிக்பாஸுக்காக சில ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக பிக்பாஸ் 5 அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.