உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவேக் நினைவஞ்சலி நிகழ்ச்சி: 29ம் தேதி ஒளிபரப்பாகிறது

விவேக் நினைவஞ்சலி நிகழ்ச்சி: 29ம் தேதி ஒளிபரப்பாகிறது

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர், என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் போற்றப்பட்டவர் விவேக். தனது காமெடி மூலம் எளிய மக்களுக்கும் நாட்டு நடப்பை புரிய வைத்தார். சுற்றுப்புற சூழலை பாதுகாக்க மரம் நட தனி இயக்கமே நடத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகால மரணம் அடைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் சின்ன கலைவாணர் விவேக் என்ற தலைப்பில் ஒரு நினைவஞ்சலி நிகழ்ச்சியை விஜய் டி.வி நடத்துகிறது. இதில் விஜய் டி.வியின் நட்சத்திர கலைஞர்களுடன் இயக்குனர் சாய் வசந்த் கலந்து கொள்கிறார். வருகிற 29ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !