உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாண்டிராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

பாண்டிராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாண்டிராஜ் தற்போது சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து அவர் ரஜினி உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !