ஓடிடியில் அனபெல் சேதுபதி - தியேட்டர் திறந்து பின்புமா...
ADDED : 1517 days ago
தமிழகத்தில் தியேட்டர்கள், 50 சதவீத இருக்கையுடன் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. புதுப்படங்களும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து தியேட்டரில் வெளியாக துவங்கியுள்ள நிலையில், தற்போது விஜய்சேதுபதி, டாப்சி பண்ணு நடித்த அனபெல் சேதுபதி படம், ‛டிஸ்னி ஹாட்ஸ்டாரில்' வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 17ல் முதல் நாள் முதல் காட்சி என படத்தை விளம்பரப்படுத்தியுள்ளனர். இது தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இறுதிகட்டப்பணிகளை முடித்து படங்களை தியேட்டரில் வெளியிடுவதில் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஹர்பஜன்சிங் நடித்துள்ள பிரண்ட்ஸிப் மற்றும் விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படத்தை சென்சார் செய்து முடித்துள்ளனர். இரண்டு படத்திற்கும் யு/ஏ சான்று தரப்பட்டுள்ளது.