பெருமாள் வரலாறு
ADDED : 1564 days ago
திருப்பதி வெங்கடாஜலபதியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக உருவாகியுள்ளது. இதில் சீனிவாச பெருமாள் எப்படி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளனர். பெருமாளாக விரத முறைகளை கடைபிடித்து ஆர்யன் ஷாம் நடித்துள்ளார். மகாலட்சுமியாக அதிதியும், பத்மாவதியாக சந்தியாஸ்ரீ நடித்துள்ளனர். படத்தை பம்பாய் ஞானம் என்றழைக்கப்படும் ஞானம் பாலசுப்பிரமணியம் இயக்கியுள்ளார். ஆர்யன் ஷாம் ஏ.வி.எம்., தயாரிப்பில், ‛அந்த நாள்' படத்திலும் நடித்து வருகிறார்.