நடிகர் மம்மூட்டி வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
ADDED : 1548 days ago
சென்னை: நடிகர் மம்மூட்டி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பட்டா நிலத்தை, கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதை, கழுவேலி புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி, நில நிர்வாக கமிஷனர், 2021 மார்ச்சில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 27க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.