வாராஹி அம்மனுக்கு கோயில் கட்டிய யோகிபாபு
ADDED : 1499 days ago
சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் வருகிறார் யோகிபாபு. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிப்பவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் திருமணம செய்து கொண்ட யோகிபாபுவிற்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சில முக்கிய ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்த யோகிபாபு, தற்போது தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம் பேடு என்ற தனது சொந்த கிராமத்தில் வாராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.