உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 9 சைமா விருதுகளுக்கு சைக்கோ படம் பரிந்துரை

9 சைமா விருதுகளுக்கு சைக்கோ படம் பரிந்துரை

9வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா(சைமா)வருகிற செப்டம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் விருது போட்டிக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்கம் (மிஷ்கின்), சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை அமைப்பாளர்(இளையராஜா), சிறந்த பாடலாசிரியர் (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் ( அருண்மொழி மாணிக்கம் ), சிறந்த ஒளிப்பதிவாளர் (தன்வீர் மிர்). சிறந்த வில்லன், சிறந்த அறிமுக நடிகர் (ராஜ்குமார் பிச்சுமணி) ஆகிய 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !