தந்தையை தொடர்ந்து மகனுக்கும் இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்த சிரஞ்சீவி
ADDED : 1500 days ago
ஷாஜகான், யூத், போக்கிரி என விஜய் நடித்த பல படங்களில் துள்ளலான பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் மணிசர்மா. தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள இவர் தற்போதும் கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். அதில் சிரஞ்சீவி தற்போது நடித்துவரும் ஆச்சார்யா படமும் ஒன்று.
இந்தநிலையில் மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் என்பவரும் தந்தை வழியிலேயே இசையமைப்பாளராக மாறிவிட்டார். ஆனால் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்காமல் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் அவருக்கு முதன்முறையாக ஜாக்பாட் பரிசாக சிரஞ்சீவியின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வேதாளம் படத்தின் ரீமேக்காக சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் போலா சங்கர் என்கிற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் மஹதி ஸ்வர சாகர்.