கதாநாயகி ஆகிறார் சிவரஞ்சனியின் மகள்
ADDED : 1546 days ago
தொண்ணூறுகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிக்கை சிவரஞ்சனி. தலைவாசல் படம் மூலம் தமிழ் சினிமாவில் வெளிச்சம் பெற்ற இவர், கலைஞன், சின்ன மாப்ளே, ராஜதுரை ஆகிய படங்களில் கமல், விஜயகாந்த், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தார்.
இதையடுத்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றவர் ஊஹா என தனது பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் மேகா ஸ்ரீகாந்த்தை காதலித்து 1997ல் திருமணம் செய்துகொண்டார். அத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி அப்படியே குடும்பத்தலைவியாக மாறிவிட்டார்.
இந்தநிலையில் சிவரஞ்சனியின் மகள் மேதா கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மகள் அறிமுகமாகும் படத்திற்காக நல்ல கதையையும் நல்ல இயக்குனரையும் சிவரஞ்சனியும் ஸ்ரீகாந்த்தும் தேடி வருகிறார்களாம். ஏற்கனவே ருத்ரமாதேவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக மேதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.