உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோலாகலமாக நடந்த ராஜா ராணி சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம்!

கோலாகலமாக நடந்த ராஜா ராணி சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அன்ஷூ ரெட்டி. ஜெயா டிவியில் கோபுரங்கள் சாய்வதில்லை தொடரில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி சின்னத்திரை நடிகையாக பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் சௌமித் ரெட்டி என்பவருடன் அன்ஷூ ரெட்டிக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !