உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் த்ரிஷா

மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் த்ரிஷா

தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அதையடுத்து பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரை வைத்து சில படங்களை இயக்கியுள்ள கோபிசந்த் மாலினேனி அடுத்தபடியாக பாலகிருஷ்ணாவை வைத்து தான் இயக்கும் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை அழைத்தபோது அப்பா வயது நடிகருடன் நடித்தால் மார்க்கெட் போய்விடும் என்று சொல்லி தவிர்த்து விட்டார்.

இதனால் அடுத்தபடியாக சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த கோபிசந்த் மாலினேனி இப்போது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இந்த படத்தில் நடிக்க த்ரிஷா ஓகே சொல்லிவிட்டால் 2015ல் நடித்த லயன் படத்திற்கு பிறகு பாலகிருஷ்ணாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படமாக இது இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !