பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் டான்சர் சதீஷ்
ADDED : 1495 days ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தில் இயக்குனர் செல்வராகவன் உட்பட பல யூகிக்க முடியாத பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் நடன இயக்குனர் சதீஷ் இந்தப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
பின்னணியில் ஆடும் டான்சராக இருந்து நடன இயக்குனராக மாறியவர் சதீஷ்.. ரஜினி விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களது பாடலுக்கு நடனம் அமைத்துள்ள சதீஷ், ஏற்கனவே தலைவா படத்திலும் விஜய்யுடன் இணைந்து பாடல் காட்சியில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து முக்கியமான வேடத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.