மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1467 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1467 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1467 days ago
சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் இந்திய இளைஞர்களால் ஹீரோவாக பார்க்கப்படுகிறவர் சோனு சூட். கொரோனா காலத்தில் அவர் தனது சொந்த பணத்தில் ஆற்றிய பணிகள், இப்போதும் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகள் ஆச்சர்யத்தோடு பார்க்கப்படுகிறது. ஒரு விமான கம்பெனி சோனுசூட் படத்தை விமானத்தின் வெளிப்புறம் முழுக்க வரைந்து கவுரவப்படுத்தியது. டில்லி அரசு அவரை மாநில தூதுவராக அறிவித்துள்ளது. அவரது சுயசரிதை விரைவில் சினிமாவாக இருக்கிறது.
இந்த நிலையில் மலையேற்ற வீரர் உமா சிங் தனது சாதனையை சோனு சூட்டுக்கு அர்பணித்துள்ளார். ஆப்பிரிக்க நாட்டிலேயே உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவை சைக்கிளில் சென்று அடைந்துள்ளார் உமா சிங். தனது இந்த சாதனையை நடிகர் சோனு சூட்டுக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நிஜ நாயகனைப் பார்த்தேன். அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கடினமான சூழலில் தனது வாழ்க்கையைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் நமது தேசத்தின் மக்களுக்காகத் தோள் கொடுத்தார். நீங்கள் தான் நம் நாட்டின் உண்மையான நாயகர் சோனு சூட் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சாதனையின் போது கிளிமாஞ்சாரோ சிகரத்தில் நின்றவாறு ரியல் ஹீரோ சோனுசூட் என்ற பதாகையையும் அவர் பிடித்து நின்றார்.
இதுகுறித்து சோனு சூட் கூறியிருப்பதாவது: மிகக் கடினமான ஒன்றை சாதிக்க வேண்டும் என்று அவர் சென்றதே எனக்குப் பெருமை. அவரது இந்த சாதனைக்கு அவரது கடின உழைப்பும், மன உறுதியுமே காரணம். அவரது வார்த்தைகளால் நான் அதிக நெகிழ்ச்சியாக உணர்கிறேன். நமது இளைய தலைமுறைக்கு இவர் ஒரு உந்துதல். இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு மன உறுதியைப் பார்க்கும் போது, நமது இந்திய இளைஞர்கள் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியும் சாதிப்பார்கள் என்பதையே காட்டுகிறது. வாழ்த்துக்கள் உமா சிங். உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. என்று கூறியிருக்கிறார்.
1467 days ago
1467 days ago
1467 days ago