வசந்தபாலன் படத்தில் இணையும் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம்
ADDED : 1534 days ago
இயக்குனர் வசந்தபாலனின் புதிய திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, அறந்தாங்கி நிஷாவை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான வசந்தபாலன் பெயரிப்படப்படாத புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாகவும், துஷாரா விஜயன் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான வனிதா விஜயகுமார் மற்றும் அறந்தாங்கி நிஷா நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டனர்.