விஜே சித்ரா நடித்த 'கால்ஸ்' பட ஒளிபரப்பு உரிமையை வாங்கிய சேனல்
மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ரா நடித்த திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் தமிழ் டிவி வாங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரை உலகையே கடும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான, அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நடிகை விஜே சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் திடீரென மரணமடைந்தார்.
இதற்கிடையே சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றிருந்த சித்ரா, 'கால்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்தார். அதில் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் பெண்ணாக நந்தினி என்ற கேரக்டரில் அருமையாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெளியாவதகு முன்னரே அவர் மறைந்துவிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது 'கால்ஸ்' திரைப்படம். தற்போது இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் தமிழ் வாங்கியுள்ளது. இந்த படத்தை விரைவில் ஒளிபரப்புமாறு சித்ராவின் ரசிகர்கள் கலர்ஸ் தமிழ் சேனலுக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.