உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு தடுப்பூசிக்கு பின்னும் பரா கானுக்கு கொரோனா பாசிடிவ்

இரண்டு தடுப்பூசிக்கு பின்னும் பரா கானுக்கு கொரோனா பாசிடிவ்

பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குனர் பரா கான். ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பரா கான் போட்டுக் கொண்டுள்ளார். அப்படி இருந்தும் தற்போது இவருக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பரா கான், “இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளேன். மேலும் அதுபோன்று இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றவும் செய்தேன். அப்படி இருந்தும் இப்போது கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் சமீபகலாமாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !