உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீரா மிதுன் மீது 3வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மீரா மிதுன் மீது 3வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் மீரா மிதுனுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 2019ம் ஆண்டு மீரா மிதுன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்புக்கு ஓட்டல் நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது ஓட்டல் நிர்வாகி புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் மீரா மிதுன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் 30 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக நாளை நீதிமன்றத்தில் மீரா மிதுனை போலீஸார் ஆஜர்ப்படுத்த உள்ளனர். தொடர்ந்து 3 வழக்குகள் மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !