மீண்டும் பூலோகம் இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி
ADDED : 1508 days ago
கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அவரது 25ஆவது படமான பூமி கடந்த ஜனவரியில் வெளியானது. அதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி அடுத்தபடியாக புதிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
அந்த வகையில் அஹமது இயக்கத்தில் ஜன கன மன படத்தில் நடிப்பவர் அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ஜெயம்ரவி. ஆக்சன் கதையில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.