தங்கைக்காக மாடல் ஆன சாய் பல்லவி
ADDED : 1491 days ago
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமிழ் நடிகையான சாய் பல்லவி. தமிழில் விரைவில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தெலுங்கில் 'லவ் ஸ்டோரி, விராட பர்வம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் எப்போதாவது ஒரு முறைதான் பதிவுகளைப் போடுவார் சாய் பல்லவி. மற்ற நடிகைகளைப் போல கிளாமர் புகைப்படங்கள் எதையும் பதிவிடும் பழக்கம் இல்லாதவர் சாய் பல்லவி. நேற்று இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளார்.
ஒரு நடிகை புடவை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களுக்கு இத்தனை லட்சம் லைக்குகள் கிடைப்பதும் பெரிய விஷயம்தான். சாய் பல்லவி பதிவிட்ட புகைப்படங்களை அவரது தங்கை எடுத்துள்ளார். “தென்றல் காற்றின் பரவசத்தில், எனது தங்கையின் தற்செயலான புகைப்படம் எடுக்கும் திறனுடன்,” என தங்கைக்காக மாடலாக இருந்து அழகான புகைப்படங்களை சகோதரிகள் எடுத்துள்ளார்கள்.