உன் மூஞ்சி ஹீரோ மூஞ்சி இல்ல ; விஜய் சேதுபதி பட்ட அவமானங்கள்
ADDED : 1493 days ago
தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி, வாழ்க்கையில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்து மாஸ்டர் செப் ஷோவில் பேசினார். மேலும் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர் கருத்துகளை கூறினார்.
மாஸ்டர் செப் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த ஷோ தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று அந்த மூன்று பேருக்கும் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதனையடுத்து நிகழ்கியில் பேசியுள்ள விஜய் சேதுபதி, ஆரம்ப கட்டத்தில் என்னை ஹீரோ மூஞ்சி இல்லை என சொல்வார்கள். என்னை ஏன் அவன் தவறாக நடத்துகிறார்கள், ஏன் கலாய்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அதற்கான பதிலை நான் எனக்குள்ளே தேட ஆரம்பித்தேன். வேலை என்பது வெளியே நடப்பது இல்லை, நம் உள்ளே நடப்பது. என கூறி போட்டியாளர்களுக்கு ஊக்கம் வகையால் பேசினார். மாஸ்டர் செப் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.