நடுக்கடலில் மாடலிங் ஷோவில் ஓவியா
ADDED : 1542 days ago
இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்தும் மிஸ்டர், செல்வி மற்றும் திருமதி பேஷன் உலகம் 2021' இறுதிச்சுற்று கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் கேசினோ கப்பலில் நடக்க உள்ளது. சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
இதுப்பற்றி நிர்வாக இயக்குனர் ஜான் அமலன் கூறுகையில், ‛‛இப்போட்டி மூலம் கிடைக்கும் நிதியை கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டிற்காக உழைத்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் வழங்க உள்ளோம். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஓவியா, அபினயா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்கள் சர்வதேச மாடலிங் தளங்களில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெறுவர்,'' என்றார்.