உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிரத்னத்திடம் விடைபெற்ற ரகுமான்

மணிரத்னத்திடம் விடைபெற்ற ரகுமான்

வரலாற்று நாவலை படிக்கும் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமான பொன்னியின் செல்வன் நாவலுக்கு உயிர்கொடுக்கும் மிக பிரம்மாண்ட முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். அதனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது,பாலிவுட்டிலும் இருந்து முக்கிய நட்சத்திரங்களை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார் மணிரத்னம். அந்த வகையில் இந்த படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டோர் தங்களது படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறித்த தகவல்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துவரும் நடிகர் ரகுமானும் இந்த படத்தில் தன்னுடைய வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் மணிரத்னத்துடன் விடைபெறும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள அவர், “பொன்னியின் செல்வன் என்கிற காவியத்தில் என்னுடைய பகுதி நிறைவடைந்தது. மணிரத்னத்துடன் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. விரைவில் அடுத்த படங்கள் குறித்த அப்டேட் தகவலை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !