உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாஜ்மகாலில் சிவகார்த்திகேயன்

தாஜ்மகாலில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், ஆர்ஜே விஜய், சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பாடல் ஷூட்டிங் தாஜ்மகாலில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த சில புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !