நாய்சேகர் - தயாராகிறார் வடிவேலு
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தில் சில ஆண்டுகளாக படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. சமீபத்தில் இந்த பட பிரச்னை தீர்க்கப்பட்டதால் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். முதல்படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படம் உருவாகிறது. இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் லைகா நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு. மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் வடிவேலு சமீபகாலமாக வெளியிடங்களிலும் அவரை காண முடிகிறது.
இந்நிலையில் நாய்சேகர் படம் தொடர்பாக வடிவேலு - சுராஜ் சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சந்தித்து கதை விவாத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மீண்டும் வடிவேலுவை திரையில் காண இருப்பதை எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.