புலவர் புலமைப்பித்தன் காலமானார்
ADDED : 1546 days ago
கவிஞரும், பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன்(85) உடல்நலக் குறைவால் காலமானார். சென்னையில் வசித்து வந்த புலமைப்பித்தனுக்கு கடந்தவாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் புலமைப்பித்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.