மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1460 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1460 days ago
கொரோனா இரண்டாவது அலையால் ஏப்ரல் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த மாதக் கடைசியில் மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களாக சொல்லிக் கொள்ளும்படியான பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. இந்த வாரத்தில் நாளை செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'லாபம்', நாளை மறுநாள் செப்டம்பர் 10ம் தேதி கங்கனா ரனவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்துள்ள 'தலைவி' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன.
இப்படங்களுக்கான முன்பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் மாலை காட்சிகளுக்கு சுமாராகவும், இரவு நேரக் காட்சிகளுக்கு மிகச் சுமாராகவும், பகல் நேரக் கட்சிகளுக்கு மிக மிகச் சுமாராகவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இதைப் பார்க்கும் போது, மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் இன்னும் முழுமையாக விலகவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும், நான்கு வாரங்களுக்குள் ஒரு படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும் அனுமதி கொடுத்துள்ளது. எனவே, தியேட்டர்களுக்குச் சென்று பயத்துடன் படம் பார்ப்பதற்குப் பதில் கொஞ்சம் பொறுமையாக நான்கு வாரங்கள் காத்திருந்து ஓடிடியில் படம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பலரும் யோசிக்கவும் வாய்ப்புண்டு.
படத்தைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகு வேண்டுமானால் தியேட்டர்களுக்குப் போகலாம் எனக் காத்திருப்பவர்களும் உண்டு. அப்படி நன்றாக இல்லை என்ற விமர்சனம் வந்தால் தியேட்டரே வேண்டாம், ஓடிடியே போதும் என நினைப்பவர்களும் உண்டு.
கொரோனா, ஓடிடி ஆகியவை தியேட்டர்களில் சென்று படம் பார்ப்பதைக் குறைக்கும் என்பதைத்தான் இந்த முன்பதிவு நிலைமை வெளிப்படுத்துவதாக உள்ளது.
1460 days ago
1460 days ago