வெள்ளித்திரையில் நுழையும் சீரியல் நடிகை
ADDED : 1490 days ago
விஜய் டிவி நடிகை காவியா, தற்போது சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்தித்தில் நடித்து பிரபலமானார் காவியா. இதனையடுத்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் பரத், வாணி போஜன் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா அறிவுமணி நடிக்கிறார். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.