உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவுக்கு பிறகுதான் எனது திருமணம் நடக்கும்! -ஜெய் எடுத்த முடிவு

சிம்புவுக்கு பிறகுதான் எனது திருமணம் நடக்கும்! -ஜெய் எடுத்த முடிவு

நயன்தாராவைத் தொடர்ந்து வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகாவையும் காதலித்தார் சிம்பு. அதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நயன்தாராவைப்போலவே ஹன்சிகாவும் சிம்புவின் காதலை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.


அதேபோல்தான் ஜெய்யும் சில ஆண்டுகளாக அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும்கூட சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் அவர்களது காதலும் முறிந்து போனது.


இப்படியான நிலையில் தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட ஜெய், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சிம்பு திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அநேகமாக சிம்புவின் திருமணம் அடுத்த ஆண்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் அதன்பிறகு எனது திருமணம் நடக்கும், என்று தெரிவித்தார்.


அதோடு, பகவதி படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்க அவரிடத்தில்100, 150 தடவை சான்ஸ் கேட்டு விட்டேன். ஆனால் அவரோ, நீதான் ஹீரோவாகி விட்டாயே, அப்புறம் ஏன் கேரக்டர் ரோல்ல நடிக்க ஆசைப்படுறே? என்று சொல்லி விட்டார் என்றார் ஜெய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !