மேலும் செய்திகள்
2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா
1468 days ago
எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில்
1468 days ago
25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி'
1468 days ago
தனது குழந்தை குறித்த கமெண்ட் அளித்த நபருக்கு கோபத்துடன் பதிலளித்துள்ள சில்வியா குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடுங்கள் என கூறியுள்ளார்.
சாண்டி - சில்வியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் தாஷா சமூக வலைத்தளங்களில் லாலா பாப்பா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். சாண்டி மற்றும் சில்வியா அவ்வப்போது தங்கள் குடும்பத்தின் புகைப்படங்களையும், மகளின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சில்வியா தங்கை சிந்தியா லாலா பாப்பாவுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. அந்த வீடியோக்களில் சிந்தியாவும் லாலா பாப்பாவும் நடனமாடுவதும், சேட்டைகள் செய்வதும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. அதற்கு பலரும் பாஸிட்டிவான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே ஒரு நபர் 'லாலா பாப்பா ஏன் குண்டா இருக்கா. ஸ்லிம்மா இருக்கட்டும் பேபி அப்போ தான் சாண்டி மாஸ்டர் மாதிரி ஆட முடியும்' என அறிவுரை கூறுவது போல் கமெண்ட் செய்துள்ளார்.
இதை பார்த்து கடுப்பான சில்வியா, 'குழந்தைங்கள குழந்தைங்களாவே வளரவிடுங்க. இப்பவே ஏன் அவங்க மேல பிரசர் போடுறீங்க. குழந்தைங்க வளர்வதற்கான ஒரு ஹெல்த்தி ஆன சமூகத்த நாம தான் உருவாக்கி தரணும்' என கோபமாக பதிலளித்துள்ளார்.
1468 days ago
1468 days ago
1468 days ago