உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 33 பிரபலங்கள் வெளியிட்ட அருண் விஜய்யின் ‛யானை' பர்ஸ்ட்லுக்

33 பிரபலங்கள் வெளியிட்ட அருண் விஜய்யின் ‛யானை' பர்ஸ்ட்லுக்

முதன்முறையாக இயக்குனர் ஹரியும், இவரது மைத்துனரும், நடிகருமான அருண் விஜய்யும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். யோகி பாபு, ராதிகா, சமுத்திகனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுவரை பெயர் வைக்காமல் அருண் விஜய் 33 சுருக்கமாக ஏவி 33 என குறிப்பிட்டு வந்தனர். இப்போது படத்திற்கு யானை என பெயரிட்டு, 4 விதமான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் ஒரு போஸ்டரில் புகைப்பிடித்தபடியும், மாற்றொரு போஸ்டரில் வினாயகர் சிலையை கையில் ஏந்தியபடியும், மற்றொரு போஸ்டரில் சங்கில் இரத்த கறை படிந்தபடியும், மற்றொரு போஸ்டரில் கையில் அரிவாள் உடன் போஸ் கொடுத்துள்ளார் அருண் விஜய். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 33 திரைப்பிரபலங்களை வைத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !