நடிகை வித்யூலேகா திருமணம்
பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யூலேகா ராமன். நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானார். அதே படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, மாஸ், இனிமே இப்படித்தான், புலி, வேதாளம் உள்பட பல படங்களில் காமெடியாக நடித்தார். தெலுங்கிலும் அதிகமான படங்களில் நடித்தார். தற்போதும் ஒரே நேரத்தில் 5 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
வித்யூலேகா, சஞ்சய் வாட்வானி என்கிற சிந்து இளைஞரை காதலித்து வந்தார். காதலுக்கு இரு குடும்பதாரும் பச்சைகொடி காட்டியதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இவர்கள் திருமணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் இரு குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.