தாய்மொழி பற்று
ADDED : 1492 days ago
பிரபல நடிகை தமிழ் படத்திற்கு 5 கோடியும், தெலுங்கு படத்திற்கு 7 கோடியும் சம்பளம் வாங்குகிறார். தற்போது அவர் நடிக்கும் ஹிந்தி படத்திற்கு 10 கோடி சம்பளம் என்கிறார்கள். இப்படி அந்நிய தேசத்தில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை தன் தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க ஓரிரு கோடி மற்றும் சம்பளம் நிர்ணயித்திருக்கிறார். அதுவும் தற்போது அவர் நடிக்க உள்ள படத்திற்கு இன்னும் சம்பளத்தை குறைத்திருக்கிறார். நடிகையின் ஓரவஞ்சனையை ஒரு பக்கம் விமர்சித்தாலும், நடிகையின் தாய்மொழி பற்றை ஒரு பக்கம் பாராட்டவும் செய்கிறார்கள்.