புதிய படத்திற்காக வெயிட் குறைக்கும் அனுஷ்கா
ADDED : 1487 days ago
நிசப்தம் படத்திற்கு பிறகு சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்க அழைத்தபோது அதை மறுத்து விட்டார் அனுஷ்கா. அதையடுத்து தெலுங்கில் யு.வி கிரியேசன்ஸ் அனுஷ்காவை பிரதானப்படுத்தி ஒரு படம் தயாரிக்க இருந்தது. ஒரு முதிர்ந்த பெண்ணுக்கும், இளைஞனுக்குமிடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி அப்படம் உருவாக இருந்தது. அதில் அனுஷ்காவுடன் நவீன் பாலிஷெட்டி நடிக்கயிருந்தார். ஆனால் அதுகுறித்த தகவல்கள் வெளியானபோதும் பின்னர் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இப்போது அந்தபடம் குறித்து ஒருதகவல் டோலிவுட்டில் வெளியாகி உள்ளது. அதாவது கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அப்படத்தின் படப்பிடிப்பை 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். தற்போது 40 வயதை நெருங்கும் அனுஷ்கா, இந்த படத்தில் கணிசமான அளவு தனது வெயிட்டை குறைத்து நடிக்கப்போகிறாராம்.