தீபாவளிக்கு பகவான்!
ADDED : 1485 days ago
தீபாவளி வெளியீடாக ரஜினி நடித்த அண்ணாத்த படமும், சிலம்பரசன் நடித்த மாநாடு படமும் வெளியாகிறது. இதனுடன் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்கும் ‛பகவான்' படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்திற்காக பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. பாடலுக்கு கலாமாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். மித்தலாஜிக்கல் த்ரில்லர் கையில் உருவாகும் இப்படத்தை காளிங்கன் இயக்குகிறார். வில்லனாக ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பார்ட் நடிக்கிறார். நாயகியாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.