உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவப்பு நிற சேலையில் இளமையான தோற்றத்தில் குஷ்பு

சிவப்பு நிற சேலையில் இளமையான தோற்றத்தில் குஷ்பு

தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் அரசியல் சமூக கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் மெலிந்து இருப்பதாக குறிப்பிட்டு மெலிந்த தேகத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். தற்போது இன்னும் சில உடல் மெலிந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது சிவப்பு நிற புடவையில் நடிகை குஷ்பு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி பட குஷ்புவை போல் இருப்பதாக பாராட்டி வருகிறார்கள். நடிகை திரிஷாவும் குஷ்புவின் உருமாறிய அழகான தோற்றத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !