உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்.,25ல் அண்ணாத்த பர்ஸ்ட் சிங்கிள்

செப்.,25ல் அண்ணாத்த பர்ஸ்ட் சிங்கிள்

சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. இந்நிலையில் சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அடுத்தப்படியாக அண்ணாத்த படத்தின் முதல் பாடலை செப்டம்பர் 25-ம் தேதி வெளியிட இருப்பதாத கவல் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாத்த படத்தின் ஓப்பனிங் பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். அதனால் அவர் மறைந்த தினமான அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பாடிய பாடலை வெளியிடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !