உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டைம் லூப் கதையா மாநாடு?

டைம் லூப் கதையா மாநாடு?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் 'மாநாடு'. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தின் கதை பற்றிய முக்கிய தகவல் கசிந்துள்ளது. அது இந்த படம் டைம் லூப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். டைம் லூப் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சிக்கி அதை மீண்டும் மீண்டும் வாழுவது. எனவே இதுவரை அரசியல் கலந்த ஆக்ஷன் படம் என்று சொல்லப்பட்ட மாநாடு படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !