அக்.,1ல் தியேட்டரில் வெளியாகும் ருத்ரதாண்டவம்
ADDED : 1531 days ago
மோகன்ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான படம் திரெளபதி. சர்ச்சைக்குரிய காட்சிகள் வசனங்கள் இடம்பெற்றதால் இப்படம் விமர்சனங்களை சந்தித்தது. என்றாலும் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. அதையடுத்து மோகன்ஜி இயக்கியுள்ள படம் ருத்ரதாண்டவம். இப்படத்தில் திரெளபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்க, தர்ஷா குப்தா, கெளதம்மேனன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் 1-ந்தேதி தியேட்டர்களில் ருத்ரதாண்டவம் வெளியாக இருப்பதாக இன்னொரு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.