மீண்டும் கதையின் நாயகியாக சமந்தா
ADDED : 1483 days ago
தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலம் படத்தில் நடித்த முடித்தபிறகு நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுக்கப்போவதாக கூறினார் சமந்தா. அதனால் தமிழில் நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஒரு பெண்ணை மையப்படுத்திய கதையில் உருவாகும் இந்த ஸ்கிரிப்ட் சமந்தாவை வெகுவாக பாதித்து விட்டதால் உடனே நடிக்க சம்மதம் கூறிவிட்டாராம். அதனால் நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இப்படத்தை ஸ்ரீதேவி மூவீஸ் கிருஷ்ணபிரசாத் தயாரிக்கிறார்.