நடன நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த பூர்ணா
ADDED : 1482 days ago
நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தீ ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளம் நபருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பூர்ணா. அப்போது அவரது கன்னத்தை கடித்து உள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவ ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என்று பலர் கூறி வருகின்றனர்.