மகேஷ்பாபு படத்திற்கு மூன்று விருதுகள்!
ADDED : 1574 days ago
2019-ம் ஆண்டில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் மகிரிஷி. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் 2019-2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட சாக்ஷி எலன்ஸ் விருது விழாவில் மகிரிஷி படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.
தொழிலதிபராக மகேஷ்பாபு நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு சிறந்த ஹீரோ விருதினை பெற்றுள்ளார். அதேபோல் டைரக்டர் பைடிபள்ளி சிறந்த இயக்குனருக்கான விருதும், தயாரிப்பாளருக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த மகிரிஷி படத்தை இயக்கியுள்ள வம்சி பைடிபள்ளிதான் பீஸ்ட் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.