உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரவிந்த்சாமி பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

அரவிந்த்சாமி பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்த அரவிந்த்சாமி தற்போது மலையாளத்தில் ஆர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே அவர் நடித்து திரைக்கு வராமல் சதுரங்கவேட்டை-2, வணங்காமுடி, கள்ளபார்ட், நரகாசூரன் போன்ற படங்கள் உள்ளன. இதில் கள்ளபார்ட் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ராஜபாண்டி இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா, ஆனந்தராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், கையில் கட்டுப்போட்டபடி வாயில் சிகரெட்டுடன் காட்சி கொடுக்கிறார் அரவிந்த்சாமி. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !