கடைசி கட்ட படப்பிடிப்பில் ஆதி புருஷ்
ADDED : 1524 days ago
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், சீதா கதாபாத்திரத்தில் கிர்த்தி சனோன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகி நடந்து வருகிறது. ஒரு மாதம் நடைபெற உள்ள இப்படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி உள்ளிட்ட சில முக்கிய காட்சிகள் படமாக உள்ளதாம். படத்தை இவ்வளவு சீக்கிரத்தில் முடிப்பார்கள் என பிரபாஸ் எதிர்பார்க்கவில்லையாம். படப்பிடிப்பை முழுவதுமாக முடித்ததும் விஎப்எக்ஸ் வேலைகள், மற்ற வேலைகள் ஆகியவற்றி முடிக்க சில மாதங்கள் ஆகுமாம்.
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. 2022 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.