'சின்ன வயசுல எடுத்ததா?' - குஷ்புவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கேள்வி
ADDED : 1483 days ago
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு தற்போது சின்னத்திரையிலும் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது குஷ்பு கலர்ஸ் தமிழ் டிவியில் டான்ஸ் விசஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். குஷ்பு தனது உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்கும் புகைப்படங்களை சமீபகாலங்களில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அந்த வகையில் சுடிதாரில் இளமையான தோற்றத்துடன் இருக்கும் குஷ்புவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இது சின்ன வயசுல எடுத்ததா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.